Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 13 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நேற்றைய தினம் ஆற்றின் இணைப்பு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையானது, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்டங்களின் பாசனத்திற்கும் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது.
இந்த சூழலில் இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களின் வைகை பூர்வீக பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வீதம் திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட ஆற்று நீர் மதுரை வைகை ஆற்றுப்பகுதிக்கு வந்துள்ளது.
இந்நிலையில் மதுரை வைகை ஆற்றில் இரண்டாம் நாளாக நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றின் கரையில் இருபுறமும் உள்ள இணைப்பு சாலையில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் இணைப்பு சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டன. அணையிலிருந்து நீர் திறப்பு காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நாளை (14) வரை மொத்தம் 915 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago