A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 07 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை :
அரசு பயன்பாட்டுக்கான வாகனங்களை, இலத்திரனியல் வாகனமாக மாற்றுவதோடு, இலத்திரனியல் வாகனம் வாங்குவோருக்கு, மானியம் அறிவித்த, டில்லி முதல்வரின், 'ஸ்விட்ச் டில்லி' திட்டத்துக்கு, கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது:என் நண்பரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், அரசு பயன்பாட்டுக்கான கார்களை, ஆறு மாதங்களுக்குள் இலத்திரனியல் வாகனங்களாக மாற்றுகிறார். மாசு கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக, 'ஸ்விட்ச் டில்லி' என்ற, திட்டத்தை முன் வைத்திருக்கிறார். இலத்திரனியல் வாகன பயன்பாட்டை, மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில், இலத்திரனியல் வாகனம் வாங்குவோருக்கு, மானியங்களை அறிவித்திருக்கிறார்.
திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமுல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டார். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, கட்சியின் பிரசார பணிகளை தீவிரப்படுத்த வும், மேடை பேச்சுகளை வலிமை பெற வைக்கவும், தலைமை நிலைய செயலர் சத்தியமூர்த்தியை, தலைமை நிலைய பரப்புரையாளராக, கமல் நியமித்துள்ளார்.
11 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
24 minute ago
2 hours ago