Freelancer / 2025 ஜூன் 12 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற மினி வேன் வெள்ளத்தில் சிக்குண்டதில், 19 சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.
மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த மினி வேனை அப்பகுதியில் கரைபுரண்டு வந்த திடீர் வெள்ளம் அடித்து சென்றது. இந்த வேனில் 22 மாணவர்கள் இருந்தநிலையில் 3 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
வேனுடன் மாயமான 19 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த சிலநாட்களாக அடைமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு மற்றும் மேற்கு கேப் மாகாணங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சூரைக்காற்றுடன் கொட்டி வரும் மழை காரணமாக அங்குள்ள மின்கம்பங்கள், ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த சுமார் 1 இலட்சம் வீடுகள் மின்சார விநியோகம் தடைப்பட்டு இருளில் மூழ்கின.
15 minute ago
29 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
50 minute ago