Editorial / 2026 மார்ச் 29 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் மதுபோதையில் வீதியில் உறங்கிய நபர் ஒருவர், மோட்டார் சைக்கிள் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சோகமான சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
கோப்பாய் - கட்டைப்பிராயைச் சேர்ந்த சபாரத்தினம் கெங்காதரன் (வயது 56). இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையே பலியானவர் ஆவார்.
சனிக்கிழமை (28) இரவு 10 மணியளவில், மதுபோதையில் இருந்த கெங்காதரன் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உறங்கியுள்ளார். அந்தச் சமயம் வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் கெங்காதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தின் பின்னர் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
18 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago