Ilango Bharathy / 2023 ஜனவரி 18 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமான விபத்தில் தனது கணவரைப் பறிகொடுத்த பெண் விமானியொருவர், 16 ஆண்டுகளுக்குப் பின்னர் அதேபோன்றதொரு விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் ‘எதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று கடந்த 15 ஆம் திகதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில், விமானத்தில் பயணித்த 69 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு விமான விபத்தில் தனது கணவரைப் பறிகொடுத்த அஞ்சு என்ற விமானி,16 வருடங்கள் கழித்து 15 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுவின் கணவரும் விமானியுமான தீபக், எதி ஏர்லைன்ஸ் விமானியாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில் அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து தீபக்கின் காப்பீட்டுத் தொகையில் கிடைத்த பணத்தின் மூலம், மஞ்சு அமெரிக்கா சென்று விமான ஓட்டியாக பயிற்சி எடுத்து, 2010ஆம் ஆண்டு எதி ஏர்லைன்ஸில் விமானியாக இணைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
47 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
3 hours ago