Freelancer / 2025 மே 25 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எலான் மஸ்க்குக்கு சொந்தமான எக்ஸ் தளம், சனிக்கிழமை (24) மாலை திடீரென முடங்கியது. இலங்கை நேரப்படி 6 மணிக்கு பின்பு நீண்ட நேரம் முடங்கியது. இதனால், சமூக வலைதளப் பயனர்களால் செயற்பட முடியவில்லை.
சர்வதேச அளவில் எக்ஸ் தளம் வெள்ளிக்கிழமை (23) முடக்கத்தை சந்தித்த நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமை (24) மீண்டும் இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய தகவல்களைப் பதிவேற்ற முயற்சி செய்யும்போது, "ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் பதிவேற்ற முயற்சிக்கவும்" என்ற நிலைத்தகவலையே காட்டுகிறது.
முன்னதாக நேற்றும் சர்வதேச அளவில் எக்ஸ் தளம் பெரும் செயலிழப்பைச் சந்தித்தது.
இலங்கை நேரப்படி அதிகாலை 1 மணிக்கு இந்தச் சிக்கல் ஏற்பட்டது. பின்பு சிறிது நேரத்தில் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் எக்ஸ் தளம் முடங்குவது இது இரண்டாவது முறை ஆகும்.
13 minute ago
25 minute ago
35 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
25 minute ago
35 minute ago
5 hours ago