Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெர்மனியில் 1933 ஆண்டில் இருந்து 1945 வரை ஆட்சியில் இருந்த அடால்ஃப் ஹிட்லர் எனும் சர்வாதிகாரியின் நாஜி கட்சியினர், இவரது பதவிக்காலத்தில் ஜெர்மனியிலும், இத்தாலியிலும் பல்லாயிரக்கணக்கான யூதர்களை பல்வேறு முறைகளில் கொன்று குவித்தனர்.
ஒக்டோபர் 1943-இல், தனது முன்னாள் நட்பு நாடான இத்தாலியை ஜெர்மனி ஆக்ரமித்த போது தங்கள் நாட்டு போர்வீரரை கொன்றதாக குற்றம் சாட்டி தெற்கு இத்தாலியின் மொலிஸ் பகுதியை சேர்ந்த ஃபோர்னெல்லி எனும் பிராந்தியத்தில் 6 இத்தாலிய குடிமக்களை அப்போதைய நாஜி படையினர் தூக்கிலிட்டு கொன்றனர். 1939-இல் தொடங்கி 1945 வரை தொடர்ந்த இரண்டாம் உலக போரின் கடைசியில் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, நாஜி படைகளை சேர்ந்தவர்களின் மீது போர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
ஃபோர்னெல்லி சம்பந்தமான வழக்கு நீண்ட காலமாக இத்தாலியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்றம் நடந்து 80 வருடங்கள் கழித்து, தூக்கிலடப்பட்டு இறந்த 6 பேரின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.107 கோடி ($13 மில்லியன்) நஷ்ட ஈடாக வழங்கவும், உயிரிழந்த 6 பேரின் வம்சத்தில் உள்ளவர்களுக்கு இது சென்றடைய வேண்டும் என்றும் இத்தாலிய நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நஷ்ட ஈட்டுத்தொகையை, ஜெர்மனி அரசுக்கு பதிலாக இத்தாலி அரசுதான் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
50 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago
1 hours ago
1 hours ago