2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

அதிகரித்து வரும் பாலியல் வன் கொடுமைகள்; அவசரநிலைப் பிரகடனம்

Ilango Bharathy   / 2022 ஜூன் 25 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிகரித்து வரும்  பாலியல் வன் கொடுமைச் சம்பவங்களால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பஞ்சாப்பில்  நாளொன்றுக்கு   நான்கு அல்லது ஐந்து பாலியல் வன் கொடுமைச் சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் பெண்களும், சிறுவர்களும்  பாலியல் வன்கொடுமைகளுக்கு  ஆளாவதைத்  தடுக்கத்  தற்போது அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு,  
இரண்டு வாரங்களுக்குள் இது குறித்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும்  பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சர் அட்டா தரார் தெரிவித்துள்ளார்.

மேலும் குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X