Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 நவம்பர் 05 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடக்கிறது. அணி மாறும் மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5 ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இந்த மாகாணங்களின் புவியியல் அமைப்பின்படி கிழக்கு, மத்திய பகுதி, மலைப் பகுதி, பசிபிக் பகுதி என 4 வகையான நேர விகிதங்கள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி அமெரிக்க மாகாணங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வித்தியாசம் நிலவுகிறது.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் அரிசோனா, ஜோர்ஜியா, மிச்சிகன், நெவாடா, நார்த் கரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகியவை அணி மாறும் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த 7 மாகாணங்களின் மக்கள், ஒருமுறை குடியரசு கட்சிக்கும், மறுமுறை ஜனநாயக கட்சிக்கும் மாறி மாறி வாக்களிக்கின்றனர்.
இந்த மாகாணங்களில் அட்லாஸ் இன்டல் என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பை நடத்தியது. இதன்படி அரிசோனாவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கு 51.9 வீதம் பேரும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலாவுக்கு 45.1 வீதம்
பேரும் ஆதரவு அளித்தனர்.
நெவாடாவில் ட்ரம்புக்கு 51.வீதம் பேரும், கமலாவுக்கு 45.9 வீதம் பேரும், நார்த் கரோலினாவில் ட்ரம்புக்கு 50.4 வீதம் பேரும், கமலாவுக்கு 46.8 வீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இதர 4 மாகாணங்களிலும் ட்ரம்ப் முன்னிலையில் இருக்கிறார். (a)
20 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago