2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வந்தனர்

Freelancer   / 2022 ஜூன் 26 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவினர், இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த தூதுக்குழுவினர் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கவுள்ளனர்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் இதை தெரிவித்துள்ளது.

ஆசியாவிற்கான பிரதி உதவித் திறைசேரி செயலாளர் றொபர்ட் கப்ரொத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளரான தூதுவர் கெல்லி கெய்டர்லிங் ஆகியோர் இந்தத் தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X