Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசு நடத்தும் பாடசாலைகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், 19ம் நூற்றாண்டு சட்டங்கள் பொதுக் கல்வியில் இருந்து பாரம்பரிய கத்தோலிக்க செல்வாக்கை நீக்கியதில் இருந்து அரச பாடசாலைகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அமல்படுத்தியது.
மேலும், வளர்ந்து வரும் முஸ்லீம் சிறுபான்மையினரைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்களை புதுப்பிக்கவும் போராடியது. 2004ம் ஆண்டில், பாடசாலைகளில் முக்காடு அணிவதைத் தடைசெய்தது மற்றும் 2010ம் ஆண்டில் பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது.
இந்நிலையில், "பாடசாலைகளில் இனி அபாயா அணிய முடியாது என்று முடிவு செய்துள்ளேன்" என்று கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் கூறினார். "நீங்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது, மாணவர்களைப் பார்த்து அவர்களின் மதத்தை நீங்கள் அடையாளம் காண முடியாது," என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
3 hours ago