Freelancer / 2024 ஜூலை 02 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் நாட்டில் வெறுப்பை பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நருக்கு மரண தண்டனை விதித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.
கிறிஸ்தவரான அந்த நபர், இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தை பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த ஆண்டு அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஜரன்வாலா நகரில் அமைந்திருந்த கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
மேலும், குர்ஆன் நூலின் சில பக்கங்களை கிழித்தது, அதனை தரையில் போட்டு அவமதித்து, மற்ற பக்கங்களில் அவதூறான கருத்தை எழுதிய செயலுக்காக கிறிஸ்தவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சூழலில் எஹ்சான் ஷான் என்ற நபருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேதப்படுத்தப்பட்ட குர்ஆன் பக்கங்களை தனது டிக்-டொக் கணக்கு பதிவில் அவர் பகிர்ந்துள்ளார். அதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. அதற்காக அவருக்கு தற்போது பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.S
9 minute ago
25 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
40 minute ago
1 hours ago