2025 மே 19, திங்கட்கிழமை

ஆபிரிக்காவில் ஆட்டங்காணும் சீன முதலீடுகள்

Freelancer   / 2022 ஜூன் 12 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் கீழ் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் நிதியளித்தல் ஆகியவற்றை கொவிட்-19  மற்றும் சீன பொருளாதார பின்னடைவுகள் மோசமாகப் பாதித்துள்ளன.

2020 ஆம் ஆண்டில் ஆபிரிக்க நாடுகளுக்கான சீனக் கடன் உறுதிகள் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை என்ற வரலாற்று ரீதியாக குறைந்த அளவை தொட்டது.

2015 - 2019 ஆம் ஆண்டு காலத்தில் வருடாந்தம் சராசரியாக 60 திட்டங்களுடன் ஒப்பிடுகையில், 2020 இல் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளன. 

முதல் பத்து கடன் பெறுநர்களில், கானா மட்டுமே  2020 இல் புதிய கடன்களைப் பெற்றதுடன், இதற்கு நேர்மாறாக, அங்கோலா மற்றும் எத்தியோப்பியா போன்ற வரலாற்று ரீதியாக அதிக கடன் வாங்கியவர்கள் எந்தக் கடனையும் பெறவில்லை.

இந்தப் போக்கு, ஆப்பிரிக்காவுக்கான சீனக் கடன்கள் வறண்டு போகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. 

2000-2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 49 ஆபிரிக்க அரசாங்கங்களுடன் 160 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள 1,188 கடன் ஒப்பந்தங்களில் சீன நிதியாளர்கள் கையெழுத்திட்டனர்.

தொற்றுநோயின் தாக்கத்தைத் தவிர, பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சி திட்டங்கள் தொழிலாளர் மற்றும் மனித உரிமை மீறல்களால் நம்பகத்தன்மையை இழப்பதுடன், கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தொழிலாளர்கள் தங்கள் மோசமான வேலை நிலைமைகள் தவிர, சீன உரிமையாளர்களால் தமக்கு பரவலான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சீன நாட்டவர்களால் தொழிலாளர்களை சுரண்டுதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற வழக்குகள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன. 

உகாண்டாவின் புக்வோ மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தின் பெண் தொழிலாளர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சீன அரச கட்டுமானப் பொறியியல்  நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு சீன பிரஜைகளை 2022 ஏப்ரலில் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அண்டை நாடான ருவாண்டாவில் இருந்தும் உள்ளூர் மக்களை சித்திரவதை செய்த இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்களை சித்திரவதை செய்த சீன நாட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், பீஜிங் கடுமையான ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கும் மேலும் அவற்றை வெளியிடுவதைத் தடைசெய்வதற்கும் அடிக்கடி விமர்சிக்கப்படுகிறது. சீன நாணயத்தில் திருப்பிச் செலுத்துதல் அல்லது நடைமுறையில் உள்ள விகிதத்தில் மாற்றுவது போன்ற நிபந்தனைகளையும் காணப்படுகிறது.

உகாண்டாவில் உள்ள என்டபே விமான நிலையத் திட்டம் போன்ற சீன கடன் நிதி திட்டங்கள் சர்ச்சைகளால் சூழப்பட்டன. 

என்டபே சர்வதேச விமான நிலையத்தை விரிவுபடுத்த வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் நியாயமற்ற விதிமுறைகளை விதித்ததற்காக சீனாவின் எக்ஸிம் வங்கியை அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆய்வுக் குழுவான எயிட் டேட்டாவின் சமீபத்திய அறிக்கை விமர்சித்துள்ளது.  

தொற்றுநோய்க்குப் பிந்தைய நெருக்கடி, பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சிக்கான சீனக் கடன்களைக் குறைத்துள்ளது.

உலக வங்கி கடன் வழங்குவதைப் போலல்லாமல், நெருக்கடி காலங்களில் ஆபிரிக்காவுக்கான சீனக் கடன்கள் குறையும் மற்றும் 2020 இல் கடன் உறுதிப்பாடு குறைவது ஆச்சரியமல்ல என்று பொஸ்டன் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய அபிலவிருத்தி கொள்கை மையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X