Freelancer / 2025 ஒக்டோபர் 16 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தெஹ்ரிக்-இ-தலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, அந்நாட்டு எல்லையில் பாகிஸ்தான் கடந்த வாரம் குண்டு வீசியது.
இதற்கு பதிலடியாக ஆப்கன் படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 58 பேர் இறந்தனர்.
இந்நிலையில், காந்தகார் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் நேற்று காலை தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கன் மக்கள் 12 பேர் உயிரிழந்தனர். 100 இற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஆப்கன் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் 48 மணி நேரத்துக்கு போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. (a)
18 minute ago
23 minute ago
32 minute ago
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
32 minute ago
02 Dec 2025