Ilango Bharathy / 2022 நவம்பர் 01 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொங்கோவில் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பொலிஸார் இருவர் உட்பட 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் கின்ஷாசா மைதானத்தில் கடந்த 29 ஆம் திகதி பிரபல பாடகர் ‘ஃபாலி இபுபாவின்‘ தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்சியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் குறித்த இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை நோக்கி படையெடுத்ததால் திடீரென அப்பகுதியில் கூட்டல் நெரிசல் ஏற்பட்டதாகவும், இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026