Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 02 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற இந்திய கட்டண சேவை நிறுவனமான போன்பே, தனது தலைமையகத்தை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு இடம்மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய இலத்திரனியல் வணிகச் சந்தையின் பெரிய நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை 2018 ஆம் ஆண்டு, அமெரிக்க சுப்பர் மார்க்கெட் பெஹிமோத் வால்மார்ட் கொள்வனவு செய்ததை அடுத்து அதன் துணை நிறுவனமானது.
அனைத்து இந்திய தொடக்க நிலை (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களும் சிங்கப்பூரில் தலைமையகத்தை அமைக்க விரும்பும் நிலையில், போன்பேயின் அறிவிப்பு அசாதாரண நகர்வாக கருதப்படுகிறது.
இந்தியாவில் பங்குச் சந்தைப் பட்டியலுக்காக போன்பே நிறுவனம் தயாராகி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சந்தை ஊகங்கள் தெரிவிக்கின்ற நிலையில், தாய் நிறுவனமான பிளிப்கார்ட் சிங்ப்பூரிலேயே தொடர்ந்தும் இயக்கிவருகிறது.
ஏனெனில், சில தொழிற்றுறைகளுக்கு நிதியளிப்பதை கடினமாக்கி இந்தியா வெளியிட்ட விதிமுறைகளே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
சிங்கப்பூரைப் பொறுத்தவரை வணிகம் செய்வதற்கான எளிதான இடமாக அறியப்படுகிறது. மேலும், ஹெரிடேஜ் அறக்கட்டளையின் பொருளாதார சுதந்திரக் குறியீட்டில் சிங்கப்பூர் உலகில் முதலிடத்தில் உள்ளது.
இது குறைந்த வரிகளைக் கொண்டுள்ளதுடன், பன்நாட்டு வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் இரண்டும் இந்தியாவை விட குறைவாக உள்ளதுடன், பங்குதாரர்களுக்கு மூலதன ஆதாய வரி இல்லை என்பது குறிப்படத்தக்கது.
இதனால் பல ஆர்வமுள்ள இந்திய தொழில்முனைவோர் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இந்தியா ப்ரீஃபிங்கின் அறிக்கையின் அடிப்படையில், 2000ஆம் ஆண்டு முதல் 8,000க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரில் பதிவு செய்துள்ளன.
சிங்கப்பூரின் வணிக நட்பு சூழல், உட்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் கணிசமான இந்திய சமூகத்தின் இருப்பு ஆகியவை இதற்கு உதவுகின்றன.
அண்மைய ஆண்டுகளில் ஆசியாவின் சிலிக்கான் வேலியாக உருவெடுத்துள்ள சிங்கப்பூர், பல துணிகர மூலதன நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு செழிப்பான தொடக்க நிலை அமைப்பைக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரின் தொடக்க நிலை சுற்றுச்சூழல் அமைப்பு 25 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பைக் கொண்டுள்ளதுடன், இது உலக சராசரியான 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் வெற்றியைப் பிடிக்கத் தொடங்கிய பிராந்திய நாடுகள், அதைப் பின்பற்றத் தொடங்கின.
சிங்கப்பூரின் அண்டை நாடுகள் தங்களுடைய சொந்த ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலை உருவாக்கி அதன் மூலம் பிராந்திய போட்டியை அதிகரித்துள்ளதாக கடந்த ஆண்டு உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டது.
அதேபோல், நாட்டிலிருந்து தொடக்கநிலை நிறுவனங்கள் வெளியேறுவதைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது.
சுற்றுச்சூழல் அமைப்பு எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க தொடக்க நிலை நிறுவனங்களுடன் ஈடுபட அரசாங்கம் தயாராக உள்ளது என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
3 hours ago