2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

இந்திய வம்சாவளி சிறந்த அழகி

Editorial   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியில் சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான 'மிஸ் இந்தியா அமெரிக்கா' (அமெரிக்க வாழ் இந்திய அழகி) போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளாக இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2022-ம் ஆண்டுக்கான 'மிஸ் இந்தியா அமெரிக்கா' போட்டி அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் நடைபெற்றது.

இதில் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஆர்யா வால்வேகர், அமெரிக்க வாழ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார்.

நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான ஆர்யா வால்வேகர் இதுபற்றி கூறுகையில், "என்னை வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும் என்பதும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றவேண்டும் என்பதும் எனது சிறுவயது கனவு" என்றார்.

மேலும் புதிய இடங்களைத்தேடிப் பயணம் செல்வது, சமைப்பது மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்றவை தனது பொழுதுபோக்குகளாக இருப்பதாக ஆர்யா கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X