2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இம்ரான் கான் மீது தேசத் துரோக வழக்கு

Ilango Bharathy   / 2022 ஜூன் 06 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து  பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
 
இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஷ் ஷெரிப்  பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்கிடையில் தனது ஆட்சி கவிழ்ந்ததில்  வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறியும்  ஷபாஷ் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்து வருகிறார்.

அத்துடன் தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-  இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி  இம்ரான்கான் அவ்வப் போது போராட்டங்களில்  ஈடுபட்டு வருகிறார்.
 
இந் நிலையில் இஸ்லாமாபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசு சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கோரி முன்னாள்  இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்குத் தொடர பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .