Freelancer / 2025 மே 27 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் ஷாண்டோங் மாகாணம் வெய்பாங் நகரில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இன்று மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தொழிற்சாலையில் தீப்பற்றியது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இரசாயன ஆலையில் இருந்து வாயு கசிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த ஊழியர்கள் சிலரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
10 minute ago
17 minute ago
32 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
32 minute ago
49 minute ago