2025 மே 14, புதன்கிழமை

இரண்டு பணயக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்கு, ஹமாஸ் தலைமையிடமாக கருதப்படும் பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது.

இதனால் அங்குள்ள பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஹமாஸ் அமைப்பினர் வசம் இஸ்ரேல் மற்றும் ஒரு சில வெளிநாட்டவர் என பலர் பிணைய கைதிகளாக உள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியிலும் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இரண்டு பெண் பிணைய கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர். வயது மூப்பு, மருத்துவ தேவைகளுக்காக அவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது காசா எல்லை பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள்ளனர்.

இது தொடர்பாக ஹமாஸ் தரப்பில் பதிவிடுகையில், 2 பெண்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் இராணுவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். இரண்டு அமெரிக்கப் பெண்களான ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ஷோஷனா ரானன் விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அவர்கள் காசா மற்றும் எகிப்து இடையேயான ரஃபா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X