2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

இளம் பெண்ணின் விநோத திருமண ஆசை

Ilango Bharathy   / 2022 ஜூன் 08 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 
ஜேர்மனியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமான பொம்மையைக்  காதலித்து வருவதாகவும், அதையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜேர்மனியின் டார்ட்மண்ட் பகுதியை சேர்ந்தவர் சாரா.
 23 வயதான இவர் விமான பொம்மையொன்றைத்  திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், இந்த பொம்மையே தனது சிறந்த துணையாக இருக்கும் என நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் ‘தனது 14 ஆம் வயதில் ரயில் பொம்மையுடன் காதலில் இருந்ததாகவும், அதன் பிறகு இந்த 737 போயிங் விமான பொம்மை தனது மனதை வென்றதாகவும்   அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன்  தான் இதற்கு முன்னர்   இரண்டு ஆண்களுடன் காதல் வயப்பட்டிருந்ததாகவும், எனினும் பிற்பட்ட நாட்களில் அவர்களின் மீது ஈர்ப்பு இல்லாததால் அவர்களை விட்டு பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
 
எனினும் தனது பொம்மைகள் எப்போதும் அப்படி ஒரு சங்கடத்தை தனக்குத்  தருவதில்லை எனவும் குறிப்பாக  தான் நேசிக்கும் விமானப் பொம்மையின் முகம், இறக்கைகள், எஞ்சின் உள்ளிட்ட அனைத்தும் தனக்குள் காதலை தோற்றுவிக்கின்ற எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் விமானங்கள் என்றாலே தனக்கு கொள்ளைப் பிரியம் எனவும் அதன் காரணமாகவே விமான பயணத்தினை அடிக்கடி மேற்கொண்டு வருவதாகவும்,  அப்போதும்கூட தன்னுடைய விமானப் பொம்மைகளை எடுத்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .