2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் பரவுகையில் மோதல்கள்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 08 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் பொருளாதார நெருக்கடியால் வெடித்த ஆர்ப்பாட்டங்கள் 11ஆவது நாளாகத் தொடருகையில் சில இடங்களில் அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்குமிடையே புதன்கிழமை (07) மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

லொர்டெகன் நகரத்தில் ஆயுதந்தரித்த தனிநபர்களால் இரண்டு பொலிஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பார்ஸ் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் செய்தி முகவரகத்தின்படி ஆர்ப்பாட்டங்களானவை 31 மாகாணங்களிலுள்ள 111 நகரங்களுக்கு பரவியுள்ளதுடன், குறைந்தது 34 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதுடன், நான்கு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதுடன், 2,200 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .