Editorial / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வீட்டின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதை கடுமையாக கண்டித்து உள்ளார். தான் மிகவும் கோபமாக இருந்ததாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புடின் மீது 91 ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு நோவ்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வீட்டை உக்ரைன் தாக்க முயன்றதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறி உள்ளார். 91 ட்ரோன்கள் மூலம் புதினின் அரசு இல்லத்தை உக்ரைன் தாக்கியது. இந்தத் தாக்குதல் மாஸ்கோவின் அமைதிப் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை மாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதே சமயம் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வீட்டின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புளோரிடாவின் மார்-அ-லாகோ விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், அதிகாலையில் புடின் தாக்குதல் குறித்துத் தனக்குத் தெரிவித்ததாகக் கூறினார். "தாக்குதல் நடக்கவில்லை என்று உக்ரைன் தரப்பு கூறுகிறது . அதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ரஷ்யா தாக்குதல் நடந்ததாக கூறுகிறது. புடின் இன்று காலை என்னிடம் போன் செய்து தாக்குதல் நடந்ததாகக் கூறினார். அதனால் நான் கோபமடைந்தேன்," என்றார் டிரம்ப்.
11 minute ago
25 minute ago
30 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
25 minute ago
30 minute ago
55 minute ago