லண்டனைச் சேர்ந்த 90 வயதான மூதாட்டியொருவரின் உயிரை ஓவியமொன்று காப்பாற்றிய சம்பவம் ஆச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது.
90 வயதான குறித்த மூதாட்டி டிமென்ஷியா எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் அவரை பராமரிக்கவும் மருத்துவ செலவுகளுக்கும் நிதி தேவைப்பட்டதால் வேறுவழியின்றி அவரது குடும்பத்தினர் அவரது வீட்டையே விற்க முடிவெடுத்துள்ளனர்.
இதனையடுத்து ஏல நிறுவனமொன்றை அவர்கள் நாடியுள்ள நிலையில் அவ்வீட்டை பார்வையிட வந்த அந்நிறுவனத்தைச் சேர்ந்தவர்
அம் மூதாட்டியின் கட்டிலின் மேலே தொங்கவிடப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்து அச்சரியத்தில் உறைந்துள்ளார்.
ஏனெனில் குறித்த ஓவியமானது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிலிப்பினோ லிப்பி என்னும் பிரபல ஓவியரால் வரையப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
குறித்த ஓவியம் எங்கே இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாமல் இருந்துள்ள நிலையில் தற்போது பல வருட தேடலுக்கு விடை கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் இந்த ஓவியம் 2,55,000 யூரோக்களுக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.