2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

உலக நாடுகளை அச்சுறுத்தும் வடகொரியா

Ilango Bharathy   / 2022 ஜூன் 07 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட கொரியா ஒரே நாளில் 8 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

, உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி  வடகொரியா தொடர்ந்து ஏவுகணைச் சோதனைகளை நடத்தி வருகிறது.
 இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள்  வடகொரியா மீது  கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

எவ்வாறு இருப்பினும் கடும் பொருளாதார நெருக்கடி, கொரோனா தொற்று பரவல் ஆகியவற்றுக்கு இடையேயும் இந்த ஏவுகணை சோதனையை மட்டும் அந்த நாடு நிறுத்தி விடவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் (5) ஒரே நாளில் 8  ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியுள்ளதாகவும், தலைநகர் பியாங்யாங் அருகேயுள்ள சுனான் பகுதியில் இருந்து 35 நிமிடங்களில் இந்த ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டுள்ளதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது. 

 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .