Freelancer / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்ரான் கான் அரசாங்கம், நாட்டிலுள்ள ஊடகங்களின் சுதந்திரமான பேச்சை முடக்கி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய அமைச்சர் ஒருவரின் செயற்பாடு குறித்து நிகழ்ச்சியொன்றில் "நெறிமுறையற்ற" கருத்துக்களை ஒளிபரப்பியமை தொடர்பில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பாகிஸ்தானின் மின்னணு ஊடக கட்டுப்பாட்டாளர் நோட்டீஸ் அனுப்பியதாலேயே மேற்குறிப்பிட்ட கருத்து வலுத்துள்ளது.
ஆசிரியர் பீட நெறிப்படுத்தல் இன்றியும் இழிவான கருத்துக்களை ஒளிபரப்பியதற்காகவும் நியூஸ்வன் என்ற தனியார் தொலைக்காட்சிக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என டான் செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டப்பூர்வ சம்பிரதாயங்கள் முடிந்து, நியூஸ்வன்னுக்கு நோட்டீஸ் வழங்கப்படுவதற்கு முன்பே, அலைவரிசை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் மற்றும் பிறரிடமிருந்து விமர்சனத்தை பெற்றுள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஒளிபரப்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அதிகாரிகளின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
12 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
25 minute ago
2 hours ago