2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஊதியம் கேட்ட பெண்; குடும்பத்தினர் முன்னிலையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவர் தனது குடும்பத்தினர் முன்னிலையில் குண்டர்களால்  கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பகவல்பூர் நகரில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய் அப்பகுதியில் உள்ள  பண்ணையொன்றில் கூலி தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

 இந்நிலையில் குசும் பாய், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமிடம் சென்று, வேலைக்கான ஊதியத்தை வாங்கி வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு  முன்னர் சென்றுள்ளார்.

இதன் போது அவரைக் கடுமையாகத் தாக்கி அடித்து விரட்டிய அக்ரம், அடுத்த நாள் , குண்டர்கள் 6 பேருடன் குசும் பாயின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளனர்.

 அதன் பின்னர் குசும் பாயை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன், இது குறித்து  பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தால் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்து விடுவதாகவும் எச்சரித்துள்ளனர்.

எனினும், இதனைப் பொருட்படுத்தாக குசும் பாய் மற்றும் அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று நேற்று முன்தினம் இதுகுறித்து  புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X