2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

எச்சரிக்கும் சிகரெட்டுகள்

Ilango Bharathy   / 2022 ஜூன் 13 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும் வகையிலும்,  அது குறித்த விளிப்புணர்வை மக்கள் மத்தியில்  ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு சிகரெட்டின்  மீதும் எச்சரிக்கை வாசகம் ஒன்றை பதிவு செய்ய அந் நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.
 
 இது குறித்து கனடாவின் மனநலம் மற்றும் போதைக்கு அடிமையாதல் துறைக்கான அமைச்சர் கரோலின் பென்னட் கருத்துத் தெரிவிக்கையில் ” புகைப்பிடிக்கச் செல்லும் இளைஞர்கள்  சிகரெட்  பெட்டியின்  மீது உள்ள எச்சரிக்கை வாசகங்களைப்  புறந்தள்ளிவிட்டு செல்கின்றனர். 
எனவே வருகின்ற 2023 வருடத்தின் இரண்டாவது அரையாண்டிலிருந்து  
ஒவ்வொரு சிகரெட்டின்  மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கத்  திட்டமிடப்பட்டுள்ளதோடு, ‘ஒவ்வொரு தடவையும் இழுக்கும்போது விஷம் உள்ளே செல்கிறது‘ என்ற வாசகம் பதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதனால் உலக அளவில் ஒவ்வொரு சிகரெட்டுகள்  மீதும் எச்சரிக்கை வாசகம் பதிக்கும் முதல் நாடாக கனடா மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X