2025 மே 14, புதன்கிழமை

ஐ.நா. தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரிப்பு

Freelancer   / 2023 ஒக்டோபர் 29 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்கிறோம் என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜோர்தான் அரசு தீர்மானம் கொண்டுவந்தது. 

இந்த தீர்மானத்துக்கு 120 நாடுகள் ஆதரவும், 14 நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தன. 

ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது என அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹென் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. 

ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு. நாஜிக்கள், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் எவ்வாறு அழிக்கப்பட்டார்களோ அவ்வாறே ஹமாஸ் பயங்கரவாதிகளும் அழிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X