Editorial / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கனடாவைப் பிரதிநிதித்து போட்டியிடும் வீராங்கனை ஒரு புதிய சவாலுக்கு முகங்கொடுத்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவியான மெடலைன் ஸ்கிசாஸ் (Madeline Schizas) போட்டியில் பங்கெடுக்கும்போது வீட்டுப்பாடத்தையும் செய்ய வேண்டும்.
பெண்களுக்கான figure skating போட்டியன்று அவர் வீட்டுப்பாடத்தை ஒப்படைக்கவேண்டும்.
அதனால் அவர் தமது பேராசிரியரிடம் கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளார்.
"நான் ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்கிறேன். இந்தப் பாடத்தை வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமையன்று ஒப்படைக்கலாமா?" என்று அவர் மின்னஞ்சல் வழி கேட்டிருந்தார்.
அந்த நகைச்சுவையான சம்பவத்தைப் பற்றித் திருவாட்டி ஸ்கிசாஸ் தமது Instagram பக்கத்தில் பதிவிட்டார். இணையத்தில் அது பரவலானது.
பேராசிரியர் இன்னமும் பதிலளிக்கவில்லை என்று அவர் கனடாவில் CBC ஊடகத்திடம் கூறினார்.
23 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago