Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 19 , பி.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட் 19 தொற்று நோய் ஆரம்பித்ததில் இருந்து சீன தலைநகரமான பீஜிங், மிகவும் தீவிரமான நோய்பரவல் அச்சுறுத்தலில் சிக்கியுள்ளது என்று தலைநகரில் உள்ள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஏப்ரல் கடைசியில் இருந்து போடப்பட்டிருந்த தடைகளை நீக்கத் தொடங்கிய சில நாட்களுக்குப் பின்னர், பீஜிங்கில் சமீபத்திய நோய்பரவல் காரணமாக, மில்லியன் கணக்கான மக்கள் கட்டாய பரிசோதனையை எதிர்கொள்வதுடன், ஆயிரக்கணக்கானோர் இலக்கு வைக்கப்பட்ட முடக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட ஹெவன் பல்பொருள் அங்காடியுடன் தொடர்புடைய கொடுமையான கொவிட் நோய்ப்பரவல் குறித்தும் அதிகாரிகள் அறிவித்தனர்.
பீஜிங்கில் உள்ள ஒரு பாரில் ஆரம்பித்த நோய்ப்பரவல் வேகமாக பரவும் கட்டத்தில் இருப்பதாகவும் பரவும் ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் பீஜிங் சுகாதார அதிகாரி ஒருவர், கடந்த வாரம் கூறியதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாருக்கு வந்தோர் மற்றும் அவர்களது நெருங்கிய தொடர்புகள் மத்தியில் அதிகமான வழக்குகள் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பீஜிங் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் துணை பணிப்பாளர் லியு சியாஃபெங், ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்துக்கான கண்ணோட்டத்தைப் பற்றிய புதிய கவலைகளை கொரோனா வைரஸ் பரவல் எழுப்பியுள்ளதுடன், பூஜ்ஜிய கொவிட் மூலோபாயத்தின் பொருளாதார தாக்கமும் வருமானத்தை பாதித்துள்ளது.
ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களுக்கு நிதி வருவாய் ஆண்டுக்கு 4.8 சதவீதம் சரிந்தது, முக்கியமாக வணிகங்களை ஆதரிக்கும் நோக்கில் வரி திரும்பப் பெறப்பட்டது என்று நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீஜிங்கின் தீவிர முடக்கங்களால், உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான சாதாரண வசதிகள் இல்லாமல் வாரக்கணக்கில் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டமை அதிகாரிகளுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையிலான எதிர்ப்புகள் மற்றும் மோதல்களுக்கு வழிவகுத்துள்ளன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago