Ilango Bharathy / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியாவில் ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டிடமொன்று இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவின் அலெப்போ நகரில் நேற்று முன்தினம் (22) இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்தில் உள்ள வீடுகளில் சுமார் 30 பேர் வசித்து வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று குறித்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 4 பேர் படுகாயங்களுக்குள்ள நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் விசாரணையில் குறித்த கட்டிடத்தின் அடித்தளமானது தண்ணீர் கசிவு காரணமாக நீண்ட நாட்களாகப் பலமிழந்து காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
46 minute ago