2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கன்னியாஸ்திரிகள் ஆபாச படங்களை பார்க்கின்றனர்

Editorial   / 2022 ஒக்டோபர் 27 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

”கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் ஒன்லைன் வாயிலாக ஆபாசப்  படங்களைப் பார்க்கின்றனர் என  போப் ஆண்டவர்  பிரான்ஸில்,  கவலை தெரிவித்துள்ளார்.

ரோமில்  அண்மையில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்  ”பக்தியையும் அன்பையும் பரப்ப வேண்டிய கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் ஒன்லைனில் ஆபாச படங்களைப் பார்க்கின்றனர். சமூக ஊடகம் என்பது பலரின் கைகளில் இருக்கும் ஒரு தீமை. பாமரர்கள் முதல் பாதிரியார்களிடம் வரை ஆபாசம் என்ற பிசாசு சமூக ஊடகம் மூலமாக நுழைகிறது” எனக் கவலை தெரிவித்துள்ளார்.

 மேலும் ”பணிவாகவும் தவறான வழிகளில் செல்லாமலும், அகம்பாவம் இல்லாமலும், கிறிஸ்தவராக இருப்பது தொடர்பான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்றும்  வருங்கால மதகுருக்களிடம் அவர்  கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X