2025 மே 19, திங்கட்கிழமை

களஞ்சிய சாலையில் தீ விபத்து; 35 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஜூன் 05 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பங்களாதேஷில் சிட்டகாங்  நகரில் உள்ள   களஞ்சிய சாலையொன்றில் நேற்றைய தினம்  (04) நள்ளிரவு பயங்கர தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. 

இத் தீவிபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும்,  450 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

30 ஏக்கர் பரப்பளவில் உள்ள குறித்த தனியாருக்குச் சொந்தமான  களஞ்சிய சாலையில்   ஹைட்ரஜன் பெராக்சைட் உள்ளிட்ட இரசாயன பதார்த்தங்கள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X