2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

களமிறங்குகிறது அமெரிக்க சிறப்புப் படை

Freelancer   / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணிகளுக்காக அமெரிக்காவின் சிறப்பு பயிற்சி பெற்ற படைகள் களமிறங்கியுள்ளன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த 7ஆம் திகதி திடீர் தாக்குதல் நடத்தினர் அதனையடுத்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து தொடர்ந்து பயங்கரமாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலை சேர்ந்த மக்களை பணயக்கைதிகளாக கடத்திச் சென்று பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் கொலை செய்வோம் என எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினரால் காசா நகரில் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்பு படைகள் விரைவில் களமிறங்களாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X