Freelancer / 2025 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் இஸ்ரேல் விதித்த நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்க மறுத்தது. இதையடுத்து காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளை ஹமாஸ் ஏற்காவிட்டால் குறிப்பாக அனைத்து பணயக் கைதிகளையும் விடுவித்து, ஆயுதக்குறைப்புக்கு முன்வராவிட்டால் ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .