2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

கிறிஸ்டியானோ மீதான பாலியல் வழக்கு ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Freelancer   / 2022 ஜூன் 15 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல காற்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக கடந்த  2009 ஆம் ஆண்டு 'கேத்ரின் மயோர்கா' என்ற பெண் அமெரிக்க நீதிமன்றத்தில் பாலியல் வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தார்.

அதில்  'லாஸ் வேகாஸில் உள்ளபோது கிறிஸ்டியானோ தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக்'  குற்றம் சாட்டியிருந்தார்.

அத்துடன் இதற்கு இழப்பீடாக  ரொனால்டோ '3,75,000 ' டொலர்கள் தரவேண்டும் எனவும்  நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார்.

இவ் வழக்கு விசாரணையின் போது, ரொனால்டோவின் சட்டத்தரணிகள் , 'புகார் அளித்த பெண்ணும், கிறிஸ்டியானோவும் பரஸ்பர சம்மதத்துடனேயே பாலியல் உறவு வைத்துக்கொண்டனர் எனவும்,  இதை பாலியல் பலாத்காரமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும், ரகசியத் தன்மை ஒப்பந்தம் இருவருக்கும் இருந்தது' எனவும் வாதிட்டனர்.

இவ்வாதத்திற்கு சம்பந்தப்பட்ட பெண்ணின் சட்டத்தரணிகள் உரிய பதிலை அளிக்காததால், குறித்த வழக்கைத்  தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது ரொனால்டோவின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X