2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கூடங்குளம் அணு மின்நிலைய ஆதரவை விரிவுபடுத்தும் ரஷ்யா

Freelancer   / 2022 ஜூன் 25 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புவிசார் அரசியல் அபிவிருத்தியுடன் தொடர்புடைய சவால்கள் இருந்தாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலைகளுக்கு ரஷ்யா தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகிறது.

அதன்படி, அணு மின்னிலையத்தின் அணு உலை 5க்கான வெப்பப் பரிமாற்றக் கருவியை ரஷ்யா தயாரித்துள்ளதாகவும் இந்தியாவுக்கு அனுப்புவதற்காக நிவாரணத் தொட்டி தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிவாரணத் தொட்டி என்பது அணுமின் நிலையத்துக்கான உபகரணங்களின் முக்கியமான கூறுகளில் ஒன்றாகும்.  

இது வெப்பமூட்டும் முறைகள் மற்றும் உலையின் ஏனைய இயக்க முறைகளில் அழுத்தத்தை ஈடுசெய்தல் மற்றும் முதன்மை சுற்றுகளின் ஏனைய உபகரணங்களிலிருந்து வரும் நீராவியின் ஒடுக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

15 மெற்றிக் தொன் நிறையும் 8 மீற்றர் நீளமும் 4 மீற்றர் உயரமும் 2.5 மீற்றர் விட்டமும் கொண்ட இதன் ஆயுட்காலம் 40 வருடங்களாகும்.

2003-2004 ஆம் ஆண்டுகளிலும் 1ஆம் மற்றும் 2ஆம் அணு உலைகளுக்கான பல உபகரணங்களை தயாரித்து ரஷ்யா அனுப்பியிருந்தது.

சமீபத்திலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின்  1ஆம் மற்றும் 2ஆம் அணு உலைகளுக்கு  நம்பகமான மற்றும் செலவு குறைந்த அணு எரிபொருளின் முதல் தொகுதிகளை ரஷ்ய நிறுவனம் வழங்கியிருந்தது.

6 அணு உலைகளைக் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமானத்தில்  ரஷ்யா ஈடுபட்டு வரும் நிலையில், 1,2 அணு உலைகள் 2013 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது.

3,5 மற்றும் 5,6ஆம் உலைகளின்  இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகளின் கட்டுமானப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறன்றன.

தளவாடங்கள் மற்றும் புவி-அரசியல் அபிவிருத்தியுடன் தொடர்புடைய சவால்கள் இருந்தபோதிலும், உக்ரைன் மோதலைத் தொடர்ந்து 3ஆவது உலையின் முக்கிய கட்டுமானப் பணிகளில் ரஷ்யாவினால் உதவ முடிந்தது.

நிறுவலுக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், பொருத்துதல் செயல்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் கால அளவு குறைப்பு ஆகியவற்றின் காரணமாக திட்டத்தை செயல்படுத்தும் காலத்தை கணிசமாகக் குறைக்க முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X