2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சவூதி விபத்தில் 9 இந்தியர்கள் பலி

Freelancer   / 2025 ஜனவரி 30 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜிஷான் நகரில் இடம்பெற்ற விபத்தில் 9 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த  விபத்தில் மொத்தமாக 15 பேர் உயிரிழந்தனர். அதில் 9 இந்தியர்கள் அடங்குவர் என, சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள தூதுரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தூதுரகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எங்களின் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறோம். இந்த விபத்து குறித்து தகவலை தெரிந்து கொள்வதற்காக, உதவி எண்களை வெளியிட்டுள்ளோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X