2025 மே 19, திங்கட்கிழமை

சீனாவில் மோசமாகியுள்ள சனத்தொகை நெருக்கடி

Freelancer   / 2022 ஜூன் 11 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் சனத்தொகை நெருக்கடி பீஜிங்கால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ தரவுகளை விட மோசமாக உள்ளது என்று சீன நிபுணர் ஒருவர் குறிப்பட்டுள்ளார். 

உலகின் சனத்தொகை கொண்ட நாடான சீனாவில், சனத்தொகையின் வளர்ச்சி விகிதம் 2021 ஆம் ஆண்டில் கணிசமாகக் குறைந்துள்ளது.

சீனாவில் பிறப்பு விகிதம் 0.752 சதவீதமாகவும் இறப்பு விகிதம் 0.718 சதவீதமாகவும் உள்ளதுடன், இயற்கையான வளர்ச்சி விகிதம் 0.034 சதவீதமாக உள்ளது என்று தேசிய புள்ளி விபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

2020 ஆம் ஆண்டில், இயற்கை வளர்ச்சி விகிதம் 0.145 சதவீதமாக இருந்தது என்ற நிக்கி ஆசியா குறிப்பிட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ புதிய பிறப்பு புள்ளிவிவரங்கள் துல்லியமாக இல்லை என்றும் இயற்கையான வளர்ச்சி விகிதம் (அதிகாரப்பூர்வ) உண்மையானது அல்ல என்றும் இது அடிப்படையில் பிரச்சாரத்துக்காக வெளியிடப்படுவதாகவும் பொருளாதார வரலாற்றுப் பேராசிரியர் கென்ட் டெங் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சனத்தொகை குறைவு உட்பட, மக்கள் விடுதலை இராணுவத்தை பலவீனப்படுத்தும் எந்த மாற்றமும், சீன மக்கள் குடியரசில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை பலவீனப்படுத்தும் என்றும் கென்ட் டெங் குறிப்பிட்டார். 

2021 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் சனத்தொகை 1.41 பில்லியனை அடைந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 480,000 அதிகரித்துள்ளது என்று தேசிய புள்ளி விபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சீனாவில் திருமணப் பதிவுகளின் எண்ணிக்கையின் தொடர்ச்சியான சரிவு பிறப்பு விகிதங்களில் சரிவுக்கு வழிவகுத்தது என்றும் இது இறுதியில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தின் சனத்தொகை பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது.

36 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் திருமணங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்த நிலையில், சீனாவின் சனத்தொகை பிரச்சினையை அதிகப்படுத்தியது.  

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற 10 வருடங்களுக்கான சனத்தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர், சீன தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதிக்கும் சட்டம் பீஜிங்கால் வெளியிடப்பட்டது. 

எனினும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக சீன தம்பதிகள் மேலதிக குழந்தைகளைப் பெற விரும்புவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தரவுகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18.7 சதவீதம் அதிகரித்து 264 மில்லியன் பேராக இருப்பதால், சீனாவின் சனத்தொகை பிரச்சினை மோசமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X