2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கத்துக்கு தடை

Editorial   / 2019 மார்ச் 01 , மு.ப. 10:10 - 1     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி: இந்தியாவை அச்சுறுத்தி வந்த பழைமையான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்த்தைத் தடை செய்வதாக, இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக, இந்திய மத்திய அரசாங்கம், கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையிலேயே, மத்திய அரசாங்கம் இந்த அதிரடியில் குதித்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெய்ஷ் இ முகமது நடத்திய புல்வாமா தாக்குதலில், மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள பழைமையான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கம் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை, இந்திய அரசாங்கம் நேற்று (28) விடுத்துள்ளது.

இந்த இயக்கம், 1941இல் தொடங்கப்பட்ட அரசியல் சார்ந்த இயக்கமென்றும் அபுல் அலா என்பவர் மூலம் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அதன்பின், இந்திய - பாகிஸ்தான் விடுதலைக்கு பின் இந்த அமைப்பு, தீவிர அமைப்பாக மாறியதாகவும், அதன்பின் அவ்வப்போது, இந்தியா மீது இந்த அமைப்பு தாக்குதல் நடத்தி வந்ததாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், சில வாரங்கள் முன் இந்த ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பைச் சேர்த்த பலர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 150 ஜமாத் - இ - இஸ்லாமி தீவிரவாதிகள் இராணுவம் மூலம் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர். இதில் ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பின் தலைவரும் அடக்கமென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜமாத் - இ - இஸ்லாமி தற்போது தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இயக்கம், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு மிகவும் நெருக்கமான இயக்கம் என்றும் இது, காஷ்மீர் பிரச்சினையில் மிக முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுவதாகவும், அந்தச் செய்திகளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 1

  • Ismail Sunday, 03 March 2019 01:22 AM

    இந்த செய்தி தவறானது. ஆசிரியர் செய்தியைத் திருத்திக் கொள்ளவும். காஸ்மீர் ஜமாத் - இ - இஸ்லாமி இயக்கமே தடைசெய்யப்பட்டுள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .