Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 25 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி 19 பேர் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலச்சரிவில் இருந்து தப்பித்த 11 பேர் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் 9 கிராமங்கள் நாசமாகின. தொடர் மழையால் மலையோர கிராமங்களில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் இடிந்து விழுந்ததால் பல கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
14 minute ago
22 minute ago