Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 15 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இல்லையென்றால் டெஹ்ரானை எரித்து விடுவோம் என அந்த நாட்டு இராணுவ அமைச்சர் கேட்ஸ் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதன்படி தங்கள் போர் விமானங்கள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பை உடைத்துக்கொண்டு எளிதாக டெஹ்ரானை அடைந்து வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.
இவ்வாறு இஸ்ரேலும், ஈரானும் தங்கள் தாக்குதலை தொடர்வதில் உறுதியாக இருப்பதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரண்டு முக்கிய எண்ணெய்க் கிடங்குகள் பற்றி எரிந்து வருவதாக, ஈரானிய எண்ணெய் அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
ஈரானிய எண்ணெய் அமைச்சகத்தின் தகவல்படி, டெஹ்ரானின் வடமேற்கே உள்ள ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளும், நகரத்திற்கு தெற்கே உள்ள மற்றொன்றும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஈரானிய ஆட்சியின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான டெஹ்ரானில் உள்ள இலக்குகள் மீது ஐ.டி.எப் விரிவான தொடர் தாக்குதல்களை நடத்தி முடித்தது. இலக்குகளில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகம், எஸ்.பி.என்.டி அணுசக்தி திட்டத்தின் தலைமையகம் மற்றும் கூடுதல் இலக்குகள் ஆகியவை அடங்கும், இது ஈரானிய ஆட்சி அணு ஆயுதத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றதற்காக மற்றும் ஈரானிய ஆட்சி அதன் அணு ஆயுதக் காப்பகத்தை மறைத்து வைத்திருந்ததற்காக
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 minute ago
9 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
45 minute ago