Freelancer / 2025 ஜூன் 16 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் அரசு தங்கள் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தின் முதல் எதிரியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கருதுவதாகவும், டொனால்ட் ட்ரம்ப்பை கொல்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,
"டொனால்ட் ட்ரம்ப் ஒரு தீர்க்கமான தலைவர். ஈரான் அரசிடம் பேரம் பேசுவதற்கான பாதையை ட்ரம்ப் தேர்ந்தெடுக்கவில்லை. போலி ஒப்பந்தத்தை அவர் கிழித்தெறிந்தார். காசிம் சுலைமானியை கொலை செய்தார். ஈரான் அரசிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். எனவே ஈரான் அரசு ட்ரம்ப்பை தனது முதல் எதிரியாக கருதுகிறது.
“ஈரானின் அணு ஆயுத திட்டத்தை எதிர்ப்பதில் டிரம்பின் 'இளைய கூட்டாளி' போல் நான் இருக்கிறேன். எனவே ஈரான் என்னையும் குறிவைத்துள்ளது. எனது படுக்கையறை ஜன்னல் அருகே ஏவுகணை வீசப்பட்டது. இஸ்ரேல் தற்போது அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.
“எனவே ஆக்ரோஷமாக செயற்படுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக உள்ளது” என்றார்.
15 minute ago
29 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
50 minute ago