Freelancer / 2025 ஜனவரி 28 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அடுத்த வாரம் அமெரிக்க ஜனாதிபத டொனால்ட் ட்ரம்பை சந்திக்க திட்டமிட்டு வருவதாக, தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக அவர் வாஷிங்டன் டி.சி.க்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பயணம் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைவதால் நேதன்யாகுவின் உடல்நிலையை பொறுத்து இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய தகவல்களின் படி பயணம் செய்தால், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவராக நேதன்யாகு இருப்பார்.
முன்னதாக இஸ்ரேலுக்கு தற்காப்பு கருவிகள் வழங்கியதற்காக ஜனாதிபதி ட்ரம்புக்கு பெஞ்சமின் நேதன்யாகு ஜனவரி 26ஆம் திகதி நன்றி தெரிவித்தார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "இஸ்ரேலுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், நமது பொதுவான எதிரிகளை எதிர்கொள்ளவும், அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் தேவையான கருவிகளை வழங்குவதாக நீங்கள் அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியதற்காக அதிபர் ட்ரம்பிற்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
8 minute ago
34 minute ago
44 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
34 minute ago
44 minute ago
47 minute ago