2026 மார்ச் 30, திங்கட்கிழமை

திருமணமான மூன்றே நாட்களில் உயிரிழந்த மணமகன்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 31 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருமணமாகி மூன்று நாட்களே ஆனநிலையில், விபத்தில் சிக்கி மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் மணிகண்டன். 21 வயதான இவருக்கு கடந்த 3 தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் தனது நண்பர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டுக்குத்  திரும்பி வந்து கொண்டிருந்த போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயங்களுக்குள்ளான மணிகண்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மரணம் அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .