Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
குறிப்பாக கடந்த 22 ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்ததோடு 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளேயே மேலும் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அயோவாவிலுள்ள, பாடசாலையொன்றில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்ததோடு, மூவர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருவேறு பண்ணைகளில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சீன தொழிலாளர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஜாவோ சுன்லி என்ற முதியவரைக் கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்தாண்டு மாத்திரம் சுமார் 647 துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 44 ,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
2 hours ago
4 hours ago