2025 மே 19, திங்கட்கிழமை

தூண்டில் போட்டவரின் தொண்டைக்குள் துள்ளிய மீன்

Ilango Bharathy   / 2022 ஜூன் 06 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தின்  பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு  மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரின் வாய்க்குள் மீன் ஒன்று சிக்கிக் கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
 
மீன் பிடிப்பதில் ஆர்வம் கொண்டுள்ள குறித்த நபர், நீரில் தூண்டிலைப் போட்டு  காத்துக்  கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக மீன் ஒன்று நீரில் இருந்து துள்ளி அவரது  வாய்க்குள் சென்று தொண்டைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.
 
இதனாால் உடனடியாக அவர் வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள்  அறுவை சிகிச்சை  மூலம் அவரது தொண்டையில் சிக்கியிருந்த மீனை வெளியில் எடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்   செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கருத்துத் தெரிவிக்கையில் ” நீரில் இருந்து துள்ளி குதித்து ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.

இதற்கு முன் இதுபோன்ற சம்பவங்களை நான் கேள்விபட்டதே இல்லை. அவரது உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் மருத்துவர்கள் செயற்பட்டு அவரைக் காப்பாற்றி விட்டனர் ” எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X