Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 11 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் நெவார்க் நகரில் இந்திய மாணவர் கைவிலங்கிடப்பட்டு தரையில் கிடத்தப்பட்டு கிடக்கும் வீடியோ வைரலான நிலையில் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நியூவார்க் சர்வதேச விமான நிலையத்தில், இந்திய மாணவர் ஒருவர் குற்றவாளியை போல நடத்தப்பட்ட சம்பவம் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜூன் 7ஆம் திகதியன்று, குணால் ஜெயின் என்ற இந்திய அமெரிக்க தொழிலதிபர், இந்த கொடூர சம்பவத்தை தனது அலைபேசி கேமராவில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.
உயர்கல்விக்காக அமெரிக்கா வந்த அந்த மாணவர், கைவிலங்கு பூட்டப்பட்டு, தரையோடு அழுத்தப்பட்டார். கண்ணீர் விட்டு அழுத போதும், வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்படுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலாக நிலையில் , வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பரவலான கவலை எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மிகுந்த கோபத்தை வெளிப்படுத்தி, இந்திய அரசாங்கம் உடனடியாக பதிலளித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என்று கோருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் எக்ஸ் பதிவில்,
"அமெரிக்கா தனது நாட்டுக்கு சட்டப்பூர்வ பயணிகளை தொடர்ந்து வரவேற்கிறது. இருப்பினும், அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது, சகித்துக்கொள்ளவும் மாட்டோம்" என்று பதிவிட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கூறி நூற்றுக்கணக்கான இந்தியர்களை கை மற்றும் கால் விலங்கிட்டு அமெரிக்கா நாடு கடத்தியமை குறிப்பிடத்தக்கது.
21 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
27 minute ago