Freelancer / 2022 ஒக்டோபர் 26 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கானை "தேச துரோகி" என்று அழைத்துள்ள பாகிஸ்தானின் ஆளும் கூட்டணி, இஸ்லாமாபாத்தில் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் அவரை எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா அரசாங்கங்கள் நாட்டில் குழப்பத்துக்கு வழி வகுக்கும் ஒரு "கருவியாக" மாறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று, பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையில் பிரதமர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஆளும் கூட்டணி கேட்டுக் கொண்டதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தை நோக்கி இம்ரான் கானின் நீண்ட அணிவகுப்புக்கான அழைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட பங்கேற்பாளர்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் வரம்புகளைக் கடந்து இஸ்லாமாபாத்தை தாக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டத்தில் தீர்மானித்தனர்.
இஸ்லாமாபாத்தில் நடைபெறும் 'ஹக்கீக்கி ஆசாதி அணிவகுப்பு'க்கு கட்சித் தொண்டர்களை தயாராக்குமாறு முன்னதாக, பிடிஐ தலைவர் இம்ரான் கான் பணிப்புரை விடுத்தார்.
மேலும், நாட்டுக்கான ஜெஹாத் எனக் கருதி நீண்ட அணிவகுப்பில் பங்கேற்பதாக உறுதிமொழி எடுக்குமாறு கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்ட அவர், எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அணிவகுப்பு இடம்பெறும் என அறிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்பட அரச நிறுவனங்களைத் தூண்டியதற்காக இம்ரான் கானை "தேசத்துரோகி, சதிகாரர் மற்றும் கலவரக்காரர்" என்று குறிப்பிட்டனர் என்று ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
இம்ரான் கானின் நீண்ட அணிவகுப்பை நிறுத்த, ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அரசாங்கம் இராணுவத்தை அழைக்கவும், தலைநகரில் துருப்புக்களை நிலைநிறுத்தவும் தீர்மானித்துள்ளது.
தலைநகரின் சிவப்பு வலயத்துக்குள் எதிர்ப்பாளர்களின் நுழைவைத் தடுக்க பாகிஸ்தான் இராணுவம் நிறுத்தப்படும் என்று உத்தியோகபூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி டான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, எந்த சூழ்நிலையிலும் இஸ்லாமாபாத்தில் பிடிஐ நுழைய அனுமதிக்க மாட்டோம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வெள்ள நிலைமை, ஓடியோ கசிவு சர்ச்சை மற்றும் பொருளாதார நிலைமை குறித்தும் கலந்துரையாடினர்.
24 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
7 hours ago
7 hours ago